
கொழும்பில் பணிப் பெண்ணை நிர்வாணமாக காணொளி பதிவு செய்த தொழிலதிபர் கைது
கொழும்பு – பொரள்ளையில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சமீப நாட்களில் இந்த காணொளி பரவியதைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் விசாரணையைத் தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான டிஐஜியின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான பொரள்ளை, ஃபேர்ஃபீல்ட் கார்டன்ஸைச் சேர்ந்த 43 வயது தொழிலதிபர், ஞாயிற்றுக்கிழமை ஹிக்கடுவவில் உள்ள பிரபல ஹோட்டலில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருக்கு உதவியதற்காகவும், பொலிஸாரிடம் இருந்து ஆதாரங்களை மறைத்ததற்காகவும் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 44 மற்றும் 55 வயதுடைய மேலும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர் தனது வீட்டில் குழுவினர் முன்னிலையில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பெண்ணின் நிர்வாணத்தை காணொளியை பதிவு செய்து, அந்த காணொளியை வாட்ஸ்அப் குழு மூலம் சமூக ஊடகங்களில் பரப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அளுத்கம நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, மேலும் முக்கிய சந்தேக நபருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கைது செய்வதைத் தவிர்க்கும் முயற்சியில் சந்தேக நபர் சம்பவத்திற்குப் பிறகு பல பிரபலமான ஹோட்டல்களில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
