அதிவேக வீதிகளில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான தொழில்நுட்ப தர ஆய்வுத் திட்டம் ஆரம்பம்

அதிவேக வீதிகளில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான தொழில்நுட்ப தர ஆய்வுத் திட்டம் ஆரம்பம்

அதிவேக வீதிகளில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான தொழில்நுட்ப தர ஆய்வுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் போக்குவரத்து விபத்துகளை குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்
என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னோடித் திட்டமாக, மகும்புராவில் இருந்து இயக்கப்படவிருந்த பல பேருந்துகள் தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்டன.

ஆய்வு செய்யப்பட்ட பேருந்துகளுக்கு தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும், ஒவ்வொரு பேருந்திலும் இயக்கத்திற்கு ஏற்றது என்பதைக் காண்பிக்ககூடியவாறான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This