பேருந்து கட்டணம் குறைப்பு

பேருந்து கட்டணம் குறைப்பு

பேருந்து கட்டணத்தை எதிர்வரும் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் 0.55% ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் 2.5% ஆல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும்
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்திற்கமைவாக எரிபொருள் விலை
அவதானிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறைந்தபட்ச கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படவில்லை எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share This