போதையில் கணவன் – மனைவியை பொல்லால் தாக்கிய சகோதரன்

திருகோணமலை-மிரிஸ்வெவ பகுதியில் கணவன் மனைவி இருவரையும் மது போதையில் பொல்லால் தாக்கிய நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் காயங்களுக்குள்ளான இருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் (05) நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது,
கணவன்- மனைவி ஆகியோருக்கிடையில் குடும்பத்த தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மது போதையில் இருந்த குறித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் இருவரையும் பொல்லால் தாக்கியுள்ளார். இதன்போது மயக்கமுற்ற நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
32 வயதான கணவரும், 27 வயதான மனைவியும் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.