
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் பலி
திருகோணமலை , கோமரங்கடவெல – திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை (24.05.205) இடம்பெற்றுள்ளது.
சிறுவன் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென வீதிக்கு வந்த யானை சைக்கிளைத் தாக்கியுள்ளது.
சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிறுவனை யானை மிதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தந்தை சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
