பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி பகுதியில் பொரளை பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..