மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மீன்பிடிக்கச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையிலேயே காணாமல் போயுள்ளார். ஆற்றில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக ஆழமான பகுதிக்குள் சென்று மீள முடியாமல் மூழ்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் கோயில் குளம் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்று திடீர் மரண விசாரணை அதிகாரி முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This