கொச்சிக்கடையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்பு

கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொருதொட்ட பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் நேற்று வியாழக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொச்சிக்கடையைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.