ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் குறித்த விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று (10) பிற்பகல் இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மாத்திரமே ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேறியுள்ளது.
நேற்றைய தினம் இது தொடர்பான விவாதம் இடம்பெறவிருந்தது.

எனினும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த விவாதம் இடம்பெற்றிருந்தது.

இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலத்தின் சரத்துகள் அரசியலமைப்பின் எந்தவொரு உள்ளீடுகளுக்கும் முரணானது இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் நேற்று வௌிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This