நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

நீதி அமைச்சினால் வரைவு செய்யப்பட்ட இந்த சட்டமூலம், மீளாய்வுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதி வழங்கல் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This