ஷேக் ஹசீனாவின் அடக்குமுறை மனிதகுலத்திற்கு எதிரானது – ஐ.நா

ஷேக் ஹசீனாவின் அடக்குமுறை மனிதகுலத்திற்கு எதிரானது –  ஐ.நா

பங்களாயுதேஷில் கடந்த வருடம் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் 1,400 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில்
அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் ஒரு மிருகத்தனமான எதிர்வினையை நடத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின்
மனித உரிமைகள் புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சமமாக இருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரச எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வன்முறையில் அடக்குவதற்கான
ஒரு அதிகாரப்பூர்வ கொள்கையை அவர்கள் கண்டறிந்ததாகவும் வெகுசன எதிர்ப்பை எதிர்கொண்டு அதிகாரத்தில்
இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Share This