
சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பளை பகுதியில் இன்று சனிக்கிழமை (09.08.2025) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமஷ்டி தீர்வை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 100 நாள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்துக்கமைய ஒன்பதாவது நாள் போராட்டமாக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


CATEGORIES இலங்கை
