தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் சிக்கி குறைந்தது 100 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் சிக்கி குறைந்தது 100 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் இருந்து சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களையும் பல உடல்களையும் மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

அங்கு நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்றும் குறைந்தது 100 பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து தென்மேற்கே சுமார் 140 கிமீ (90 மைல்) தொலைவில் உள்ள ஸ்டில்ஃபோன்டைன் அருகே உள்ள சுரங்க நேற்று மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி நேற்று ஏழு பேரை மீட்க முடிந்ததாக தென்னாப்பிரிக்க தேசிய குடிமையியல் அமைப்பைச் சேர்ந்த முசுகிசி ஜாம் சுரங்கத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

குறைந்தது நான்கு உடல்களும் மீட்கப்பட்டன. எவ்வாறாயினும், நிலத்தடியில் அதிகளவான உடல்கள் மூடப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டவிரோத நடவடிக்கையில் இருந்து சுரங்கத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக பொலிஸார் முதன்முதலில் நடவடிக்கையை எடுத்திருந்தனர்.

“குறைந்தபட்சம்” 100 ஆண்கள் இறந்திருக்கலாம் எனவும் சுரங்கத் தொழிலாளர்கள் பட்டினியால் இறந்திருக்கலாம் அல்லது நீரிழப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை அதிகாரிகளால் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ மீட்பு நடவடிக்கையில் மேலும் ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டதுடன், மேலும் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

புதிய மீட்பு நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர் எத்தனை உடல்கள் மீட்கப்பட்டன, எத்தனை பேர் உயிர் பிழைத்தவர்கள் என்பது குறித்த தகவல்களை சரிபார்த்து வருவதாக தென்னாப்பிரிக்க பொலிஸ் சேவை செய்தித் தொடர்பாளர் சபாடா மோக்வாபோன் கூறினார்.

 

Share This