இரகசியமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நிச்சயதார்த்தம்

இரகசியமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நிச்சயதார்த்தம்

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இரகசியமாக நடைபெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு பெப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் முதலில் சேர்ந்து நடித்தார்கள். அந்தபடம்
மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இருவருமே முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர்.

குறிப்பாக ராஷ்மிகா நடித்த பல படங்கள் வரவேற்பைப் பெற்றதால், இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவருமே நீண்ட வருடங்கள் கழித்து புதிய படமொன்றில் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தில் ராஜு தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Share This