
குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கையர்கள் நாட்டிற்கு
குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை (26) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குவைத் மற்றும் இலங்கைக்கு இடையில் 2007 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கைதிகளில் 34 பேர் கடந்த 2024 ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மீதமுள்ள இலங்கை கைதிகளில் மேலும் 20 பேர் இன்று நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 20 கைதிகளையும் அழைத்துச் செல்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
