தென் கொரிய விமான விபத்தில் அனைவரும் உயிரிழப்பு – இலங்கை அரசாங்கம் இரங்கல்

தென் கொரிய விமான விபத்தில் அனைவரும் உயிரிழப்பு – இலங்கை அரசாங்கம் இரங்கல்

தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து தென் கொரியாவின் முவான் நோக்கி 181 பேருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் இருவரை தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த துயரச் சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிப்புகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது

“இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இழப்பைச் சமாளிக்க அவர்கள் மன உறுதியைப் பெறவேண்டும்” என்று அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும் எனவும், “காயமடைந்தவர்கள் முழுமையாகவும் விரைவாக குணமடைய எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் இருக்கும்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This