உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சுட்டுக்கொலை

உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயற்பட்டு வந்த ஆண்ட்ரி போர்ட்னோவ். அடையாளந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள பாடசாலையொன்றிற்கு அருகில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஆண்ட்ரி போர்ட்னோவ்.
2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய இவர், விக்டர் யானுகோவிச்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார்.
விக்டர் யானுகோவிச் ஆட்சிக் காலத்தின்போது பெரும்பாலும் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஆண்ட்ரி போர்ட்னோவ் பின்பற்றி வந்தார்.
மேலும் உக்ரைனில் 2014 ஆம் ஆண்டு நடந்த மாபெரும் புரட்சியில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றியதில் ஆண்ட்ரி போர்ட்னோவ் முக்கிய பங்காற்றினார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.