கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
வெலியார பகுதியில் இன்று (24) அதிகாலை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று, லொறியொன்றின் பின்புறத்தில் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது லொறி சாரதியும் பஸ்ஸில் பயணித்த 12 பயணிகளும் காயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.