கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றும், மாவனெல்லையில் இருந்து கேகாலை நோக்கிச் சென்ற சிறிய லொறியும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பஸ்ஸை கவனக்குறைவாக செலுத்தியமையே விபத்துக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியில் இருந்த இருவர் காயமடைந்த நிலையில் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.