தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் கொடிக்கம்பம் வீழ்ந்து விபத்து

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் கொடிக்கம்பம் வீழ்ந்து விபத்து

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் சுமார் 100 அடி கொடிக்கம்பம் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் 02 ஆவது மாநாடு நடைபெற உள்ள நிலையில்
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தநிலையில் கிரேனின் பெல்ட் திடீரென
அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது வீழ்ந்ததால் கார் முற்றாக சேதமடைந்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த விபத்தில் எவருக்கும் உயிர் சேதம் இல்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This