யாழில் மின் உயர்த்தியிலிருந்து வீழ்ந்த இளைஞன் பலி

யாழில் மின் உயர்த்தியிலிருந்து வீழ்ந்த இளைஞன் பலி

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள ஹோட்டலில் மின் உயர்த்தியில் (Lift) இருந்து வீழ்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த ஹோட்டலில் பணி புரிந்த இளைஞன் பொருட்களை கொண்டு செல்வதற்காக மின் உயர்த்தியில் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் மின் உயர்த்தி வடிவமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், நிர்வேலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )