
முந்தலம் பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு
முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் ஒன்றும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள நவதன்குளம் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
