பிரித்தானியாவில் இலங்கை தமிழர் ஒருவர் கைது

லிவர்பூலில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்படும் சுஜந்த் கேதீஸ்வரராசா, கடந்த புதன்கிழமை லிவர்பூல் நகர மையத்தில் உள்ள தேசிய குற்றவியல் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிரான்சில் ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தேசிய குற்றவியல் நிறுவனம் nதரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய குற்றவியல் நிறுவனத்தின், கிளேர் மீஹான், “பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதை விட வேறெந்த முன்னுரிமையும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
“உள்நாடு மற்றும் சர்வதேச நாட்டில் உள்ள கூட்டாளர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஊடாக சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை காணொளி ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் நாடு கடத்தப்படும் வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
