மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில்  கைதி​யொருவர் பலி

மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில்  கைதி​யொருவர் பலி

மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில்  கைதி​யொருவர் உயிரிழந்துள்ளார்.

கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கட்டிடமொன்றின் மீது நேற்றிரவு(01) 10.30 அளவில் மரக்கிளை முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 கைதிகள் காயமடைந்துள்ளதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது கட்டிடத்தினுள் 400 இற்கும் அதிக கைதிகள் இருந்ததாக சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மாத்தறை மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This