பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர் ஒருவர் பலி

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர் ஒருவர் பலி

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் இன்று (26) பகல் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவரே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

உயிரிழந்தவர் அதே தோட்டத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

புல் வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​பெரிய மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூண்டை பறவையொன்று தாக்கியதைத் தொடர்ந்து
அவர் குளவி கொட்டுக்கு இலக்கானமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This