பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபர் மாயம்

பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமற்போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமற்போன நபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This