தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

மாலம்பே பகுதியிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடம் இருந்து 480 மில்லிகிராம் கொக்கெய்ன், 71 கிராம் குஷ், 850 மில்லிகிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் 50 கிராம் ஹஷிஷ் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடுவெல, ஹேவாகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.