
நல்லூரில் வீடொன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் – நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள வீடொன்று, இரவுவேளையில் உடைக்கப்பட்டு பெருந்தொகையான வெளிநாட்டு நாணயமும், தங்க ஆபரணங்களும் அண்மையில் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தீவிர விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவு முன்னெடுத்திருந்தது.
இதன்போது அவரிடம் இருந்து பெருந்தொகையான வௌிநாட்டு நாணயம் மற்றும் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
