30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரச பேருந்து….மூவர் உயிரிழப்பு

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரச பேருந்து….மூவர் உயிரிழப்பு

கேரள மாநிலம், இடுக்கி புல்லுப்பாறை அருகில் அரச பேருந்தொன்று சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதோடு உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மாவேலிக்கரையிலிருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This