நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு

இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் 90 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பிற்பகல் 3.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

ஆனாலும் குறித்த மின் உற்பத்தி நிலையம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரையில் மின்சார விநியோகத்தில் இவ்வாறு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என ஊடகப் பேச்சாளரும் களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின் நிலையத்தின் தலைமைப் பொறியியலாளருமான தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This