குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்கப்படும் – விவசாய அமைச்சர்

குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்கப்படும் – விவசாய அமைச்சர்

விவசாயிகளிடமிருந்து நிர்ணய விலையின் கீழ் கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரசியாக்கி , தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில்
நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயம் மற்றும் கால்நடை துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை கருத்திற்கொண்டு நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்ததாக கூறிய அமைச்சர் அந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து  குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

 

Share This