டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 1,382 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 764 டெங்கு நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 315 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.