பணம் கொடுக்கல், வாங்கலில் முரண்பாடு…அண்ணனைக் கொலை செய்த தம்பி
வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனைப் பகுதியில் நபரொருவர் தன் அண்ணனை கத்தியால் குத்தியதில் அண்ணன் உயிரிழந்ததுடன் தம்பி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை காலை அண்ணன் வீட்டுக்குச் சென்றபொழுதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சகோதரர்கள் இருவருக்குமிடையில் இருந்து வந்த பணம் கொடுக்கல், வாங்கல் முரண்பாட்டையடுத்தே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத் தாக்குதலில் படுகாயமடைந்த 43 வயதான நபரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் உடல் உடற்கூற்று ஆய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அண்ணனைக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற தம்பியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.