“டாஸ்மாக்கில் எப்பவும் பாஸ் மார்க் தான் ஆனால், கள் இறக்கினால் குற்றமா?” – சீமான்

“டாஸ்மாக்கில் எப்பவும் பாஸ் மார்க் தான் ஆனால், கள் இறக்கினால் குற்றமா?” – சீமான்

விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இடம்பெற்று வரும் கள் விடுதலை மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது,

“தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு ஏன் தடை? உயிரைக் குடிக்கும் விஷக் கடைகளை அரசு திறக்கிறது. ஆனால், கள் கடைகளை ஏன் திறப்பதில்லை.

தேசிய பானம் கள்ளுக்கு தமிழகத்தை தவிர இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் அனுமதியுண்டு.

கள் மது என்று கூறினால், அப்போது டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது என்ன தீர்த்தமா?

இந்தியாவில் ஆளும் எந்த மாநில முதலமைச்சருக்கும் சாராய ஆலை இல்லை. ஆனால் தமிழகத்தில் இருக்கிறது. இந்த அரசு டாஸ்மாக்கில் மட்டும் எப்பொழுதும் பாஸ் மார்க் தான்.

வருடத்துக்கு ரூபாய் 50 ஆயிரம் கோடிக்கு சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.

கள் இறக்குவது வேளாண்மை சார்ந்த தொழில்” இவ்வாறு சீமான் அம் மாநாட்டில் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This