காதலன் கொலை…காதலிக்கு கிடைத்த மரண தண்டனை! பிணையில் வெளியே வந்தால் நிரபராதி அல்ல!

காதலன் கொலை…காதலிக்கு கிடைத்த மரண தண்டனை! பிணையில் வெளியே வந்தால் நிரபராதி அல்ல!

கன்னியாகுமரியில் வசித்து வந்த கரீஸ்மாவும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷெரோனும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். திடீரென கரீஸ்மாவின் வீட்டார் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்துள்ளனர். ஆனால், கரீஸ்மாவுடனான காதலை துண்டித்துக்கொள்ள ஷெரோன் மறுத்துவிட்டார்.

ஏற்கனவே வீட்டாரினால் மூளைச்சலவை செய்யப்பட்ட கரீஸ்மா தன் காதலன் ஷெரோனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

முதலில் சில வலி நிவாரண மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து ஷெரோனை கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஷெரோனை வீட்டுக்கு அழைத்த கரீஸ்மா களைக்கொல்லி மருந்தை கசாயத்தில் கலந்து குடிக்கக் கொடுத்துள்ளார். அதைக் குடித்த ஷெரோனுக்கு உடல் நிலை மோசமடைய வீட்டுக்கு விரைந்துள்ளார்.

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷெரோன் சுமார் 10 நாட்களாக உயிருக்கு போராடியிருக்கிறார். அவரது உள்ளுருப்புக்கள் அனைத்தும் செயலிழந்து ஷெரோன் உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் ஷெரோனின் குடும்பத்தினர் கரீஸமா மீது முறைப்பாடு செய்ய, பொலிஸாரின் விசாரணையில் ஷெரோனுக்கு கரீஸ்மா விஷம் கொடுத்ததும் ஆதாரங்களை அழிக்க கரீஸ்மாவின் தாய் மற்றும் மாமா ஆகியோர் உதவியமையும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மூவர் மீதும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்ததில், ஒரு வருடம் சிறையில் இருந்த கரீஸ்மா பிணையில் வெளியில் வந்தார்.

இவ்வாறிருக்க கடந்த வாரம் கேரளா நெய்யான்றின்கரை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் கரீஸ்மா குற்றவாளி என தீர்ப்பு வந்தது.

கரீஸ்மா ஒரு கடிதத்தில், தான் இளம் வயது பெண், தாய்க்கு ஒரே மகள், இதற்கு முன் குற்றங்கள் எதுவும் செய்ததில்லை என்று எழுதி நீதிபதியிடம் கொடுத்துள்ளார்.

இந்தக் காரணங்களையெல்லாம் ஏற்க முடியாது எனக் கூறி நேற்று கரீஸ்மாவுக்கு மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்.

ஆதாரங்கள் இல்லாததால் தாய் மற்றும் மாமா விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்படி, கேரளாவில் மரண தண்டனைப் பெற்ற மிகக் குறைந்த வயதுப் பெண் கரீஸ்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Share This