கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை…இன்று தண்டனை அறிவிப்பு

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை…இன்று தண்டனை அறிவிப்பு

கொல்கத்தாவில் கடந்த வருடம் ஒகஸ்ட் 9 ஆம் திகதி பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவருக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமைக்கு நீதி வேண்டி, நாடு முழுவதும் பேராட்டங்கள் வெடித்தன.

இச் சம்பவத்தில் சந்தேக நபரான சஞ்சய் தத் எனும் தன்னார்வலர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவ் விடயம் தொடர்பில் விசாரணைண நடத்திய கொல்கத்தா உயர் நீதமன்றம் வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தது.

மேலும் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

அதுமட்டுமின்றி இவ் வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் 12 ஆம் திகதி கெமரா முன்பு சுமார் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.

பரபரப்பான விசாரணைகளையடுத்து, நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும் மத்திய புலனாய்வுப் பிரிவு வலியுறுத்தியுள்ள நிலையில் அவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டாலும் மேல் முறையீடு செய்ய மாட்டோம் என சஞ்சய் ராயின் தாய் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This