கார்,பஸ்,லொறி விபத்து….9 பேர் உயிரிழப்பு
மஹாராஷ்ட்ரா மாநிலம் நாராயன்கவுன் பகுதியில் கார், பஸ் மீது லொறி மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
லொறி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதியுள்ளது.
நிலைதடுமாறிய கார் அந்த வழியே வந்த பஸ் மீது மோதியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அப் பகுதி மக்களுடன் சேர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.