தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – 15 சுற்றுலாப் பயணிகள் காயம், ஒருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – 15 சுற்றுலாப் பயணிகள் காயம், ஒருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரெக்க மற்றும் பெலியத்த இடையே ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் 15 சுற்றுலாப் பயணிகள் கடுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிமென்ட் ஏற்றப்பட்ட லாரியுடன் மோதியதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share This