போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கவில்லை – ஹமாஸ் உறுதிப்படுத்தியது

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கவில்லை – ஹமாஸ் உறுதிப்படுத்தியது

கத்தார் மற்றும் அமெரிக்காவின் தலையீட்டினால் முன்னெடுக்கப்பட்டுள்ள காசாவில் “போர் நிறுத்த ஒப்பந்தத்தை” மீறவில்லை என ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

“கடைசி நிமிட சலுகைகளை” பெறுவதற்காக ஒப்பந்தத்தின் சில கூறுகளில் ஹமாஸ் பின்வாங்கியதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

முன்னதாக காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது குறித்து விவாதிக்க இன்று காலை திட்டமிடப்பட்ட அமைச்சரவை கூட்டம் தாமதமாகும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்திருந்தது.

ஹமாஸ் கடைசி நிமிட சலுகைகளை நாடுவதாக பிரதமரின் அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.

“ஹமாஸ் ஒப்பந்தத்தின் அனைத்து கூறுகளையும் ஏற்றுக்கொண்டதாக மத்தியஸ்தர்கள் இஸ்ரேலுக்கு அறிவிக்கும் வரை இஸ்ரேலிய அமைச்சரவை கூடாது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்காக உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் அமைச்சரவை கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம், அங்கீகரிக்கப்பட்டால், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

Share This