ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசை – முன்னேறிய மஹீஷ் தீக்ஷன

ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசை – முன்னேறிய மஹீஷ் தீக்ஷன

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி)  வெளியிட்டுள்ள ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஒரு படி முன்னேறியுள்ளார்.

அதன்படி, மகேஷ் 663 புள்ளிகளுடன் ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தை எட்டியுள்ளார். அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அவர் சிறப்பாக செயல்பட்டதால் நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதேவேளை, ஐ.சி.சி ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ரஷீத் கான் முதலிடத்திலும், இந்திய வீரர் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Share This