2047ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது – மோடி
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஆற்றிய உரையில் 2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,“இந்தியா திறமையான இளைஞர்களைக் கொண்ட நாடு. நான் எங்கு சென்றாலும் உங்களால் என் தலை நிமிர்கிறது. நான் சந்தித்த உலகத் தலைவர்கள் அந்நாட்டில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் தொடர்பில் பாராட்டுகின்றனர்.
இந்தியர்கள் எங்கு சென்றாலும் அச் சமூகத்துடன் ஒன்றித்துப் போகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு துறையும் முன்னேறி வருகிறது.
நம் வாழ்வில் ஜனநாயகம் வேரூன்றியிருக்கிறது. 2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா திறமையான இளைஞர்களைக் கொண்ட நாடாக இருக்கிறது.
அவர்கள் திறமையுடன் செல்வதை உறுதி செய்ய அரசு முயன்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.