தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் – ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு
தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு மூன்று நாட்களுக்குள் கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு மற்றும் சேவை நிரந்தரம் போன்ற கோரிக்கைக்குரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், திருப்திகரமான தீர்வு எட்டப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.