இந்தியாவில் அதிகரித்த ‘ஸ்க்ரப் டைபஸ்’ பக்டீரியா தொற்று…இது தான் அறிகுறிகள்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்,வேலூர் ஆகிய பகுதிகளில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனும் பக்டீரியா நோய்த் தொற்று அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்கட்சியா எனப்படும் பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட பூச்சிகள், ஒட்டுண்ணிகள் ஆகியவை மனிதர்களை கடிக்கும்போது இந்நோய் அவர்களிடம் ஏற்படுகிறது.
காட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் பங்குபற்றுபவர்கள், விவசாயிகள், புதர் மண்டிய இடங்களுக்கருகில் வசிப்பவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோருக்கு இந் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
தலைவலி, காய்ச்சல், உடல் சோர்வு, தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
இந் நோய் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொது சுகாதாரத் துறை மருத்துவர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.