பிரித்தானிய வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரி பதவி நீக்கம்

பிரித்தானிய வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரி பதவி நீக்கம்

பிரித்தானிய வெளியுறவுத்துறையின் நிரந்தரச் செயலாளர் சர் ஓலி ரொபின்ஸ் (Sir Olly Robbins) தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதராக லார்ட் மண்டல்சன் (Lord Mandelson) நியமிக்கப்பட்ட போது, அவர் பாதுகாப்புச் சோதனையில் (Security Vetting) தோல்வியடைந்த தகவலைப் பிரதமருக்கு அறிவிக்கத் தவறியமையே இதற்குக் காரணமாகும்.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்ட லார்ட் மண்டல்சன், ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு காரணமாகப் பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இருப்பினும், அவரது நியமனத்தின் போது முழுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதாகப் பிரதமர் Sir Keir Starmer நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது பாதுகாப்பு அமைப்புகளின் எச்சரிக்கையை மீறி இந்த நியமனம் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், பிரதமர் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த விவகாரத்தால் அதிருப்தியடைந்துள்ள பிரதமர், வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இது குறித்த விளக்கத்தை அளிக்கவுள்ளார்.

அதேவேளை, இப்பிரச்சினை காரணமாகப் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )