
இஸ்ரேல் அணுசக்தி மையம் மீது ஈரான் தாக்குதல்
ஈரான் அணுசக்தி மையத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள டிமோனா (Dimona) நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது .
அணுசக்தி அனர்த்தங்களைத் தவிர்க்க நிதானத்துடன் செயற்படுமாறு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தெற்கு இஸ்ரேலிலுள்ள டிமோனா நகரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த ஏவுகணை, இஸ்ரேலிய அணுசக்தி மையத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் விழுந்து வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தெற்கு இஸ்ரேலின் எராட் (Arad) நகர் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
CATEGORIES உலகம்
