
கிளிநொச்சியில் எரிப்பொருள் பதுக்கியவர் கைது
கிளிநொச்சி – இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கபப்ட்டிருந்த 1,220 லீற்றர் பெற்றோல் மற்றும் 530 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளன .
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, இராமநாதபுரம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது எரிபொருள் கையிருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன . சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேநேரம் , கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மற்றுமொரு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 247 லீற்றர் டீசலும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
CATEGORIES இலங்கை
