வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளும் அழிக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை

வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளும் அழிக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் அரசு பதிலடி கொடுத்துள்ளது.

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளையும் ஈரான் இலக்கு வைக்கும் என ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரானின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதேநேரம் ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்துக்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தனது ‘Truth Social’ சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்தப் பதிவை இட்ட நேரத்திலிருந்தே இந்த 48 மணிநேரக் காலக்கெடு ஆரம்பமாவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 21 ஆம் திகதி GMT நேரப்படி 23:44 மணிக்கு இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி GMT 23:44 மணி வரை ஈரானுக்கு இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )