ஜனாதிபதி அநுரகுமாருக்கு மனோ கணேசன் பகிரங்க எச்சரிக்கை

ஜனாதிபதி அநுரகுமாருக்கு மனோ கணேசன் பகிரங்க எச்சரிக்கை

எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துக்கொள்வனவில் நிலவும் ஏகபோகக் கும்பல்களை ஒழிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்து வரும் நிலையில், அரசாங்கத்திற்குள்ளேயே புதிய கும்பல்கள் உருவாகி வருவதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பழைய ஏகபோகங்களை உடைக்க ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார்.

இருப்பினும், அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட நிறுவனங்கள், வெவ்வேறு போர்வையில் புதிய ஏகபோகக் கும்பல்களாக உருவெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘பழைய கும்பல்களுக்குப் பதிலாக புதிய கும்பல்களைக் கொண்டு வருவதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை’ எனத் தனது ‘X’ தளப் பதிவிலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )