2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மாகாணசபைத் தேர்தல்

2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மாகாணசபைத் தேர்தல்

2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார் .

எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில்  எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் அமைச்சர்  கூறியுள்ளார் .

பொருளாதார இலக்குகளை நோக்கி செல்லும் போது அநாவசியமான அழுத்தங்களை தவிர்க்கும் வகையிலேயே மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார் .

 இதேவேளை  பழைய முறைமையின்  கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு சிறியதொரு சட்டத்திருத்தமே தேவைப்படுகின்றது என எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கிலேயே எல்லை நிர்ணயம் பற்றி ஆளுந்தரப்பு கதைத்து வருகின்றது எனவும் எதிர்க்  கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இவ்வாரம் கூடவுள்ளது.  குழுவின் தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )