இலங்கை  கடல் எல்லைக்கு அருகே ஈரான் கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை தொடர்பில்  நாமல் ராஜபக்ஷ கருத்து

இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ கருத்து

இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரானிய கடற்படைக் கப்பலான IRIS Dena மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து  வெளியிட்டுள்ளார்.

 இந்த சம்பவம் சர்வதேச கடல்சார் விதிமுறைகளை மீறும் சட்டவிரோதச் செயல் எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

விசாகப்பட்டினம் அருகே இந்தியக் கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இக்கப்பல் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ (Torpedo) தாக்குதலால் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் 80-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் உயிரிழந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் இந்தியா முதன்மையான பங்கினை வகிக்க வேண்டும் என  நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார் .

இதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு (Colombo Security Conclave) போன்ற பிராந்திய கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் எனவும், கடல்சார் விழிப்புணர்வு முன்முயற்சிகளை மேம்படுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ  கேட்டுக்கொண்டுள்ளார் .

ஈரானிய தப்பிப்பிழைத்தவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை இலங்கையைக் கேட்டுக்கொண்டதாக வெளியாகும் செய்திகளையும்  அவர் விமர்சித்துள்ளார் ..

“இலங்கை தனது தேசிய நலன்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் உரிமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்” என அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார் .

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )